21 Lessons For The 21St Century (Tamil)
D**I
21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
மிகவும் சுவாரஸ்யமாக மனிதகுல வரலாற்றை விவரித்த சேப்பியன்ஸ் மற்றும் மனிதகுலத்தின் வருங்காலத்தை முன்வைத்து எழுதப்பட்ட ஹோமோ டியோஸ் என்கிற மிக பிரபலமான புத்தகங்கள் எழுதிய உலக புகழ்பெற்ற வரலாற்றியலாளரும், தத்துவவியலாளருமான யுவால் நோவா ஹராரியின் மூன்றாவது புத்தகமான 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் தமிழில் வெளி வந்துள்ளது . முன்னெப்போதையும் விட மிக வேகமாக மாறி வரும் சமூக சூழலை புரிந்து கொள்ளவும், மனிதகுலத்தின் முன்உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் வழிகாட்டும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது .செயற்கை நுண்ணறிவு மனிதர்களை முழுமையாக புரிந்து கொண்டு, மனிதர்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளில் அவர்களை விஞ்சி அதிசிறப்பாக செயல்படக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது முதல் பகுதி. நாம் இணையத்தில் ஏதேனும் தேடும் போதும், யூடியூப் வீடியோக்களை பார்க்கும் போதும், சமூக வலைத்தளங்களில் உள்ளதை படிக்கும் போதும் நம்மை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. நம்மை பற்றி சேகரிக்கப்படும் தகவல்கள், நமது இதய தந்திகளை எவ்வாறு இழுப்பது என்பதையும், நமது மூளையின் பொத்தான்களை எவ்வாறு அழுத்துவது என்பதையும் கூகுள், அமேசான், யூடியூப் போன்ற நிறுவனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துகிறது. இதனால் கூடிய விரைவில் வாக்காளர்களே முதன்மையானவர்கள் என்ற வாதமும், வாடிக்கையாளர்களே முக்கியமானவர்கள் என்பதும் காலாவதியாகி பெரும்பான்மை மக்கள் உதவாக்கரைகளாக எவ்வாறு மாற்றப்படுவர் என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.இரண்டு மாபெரும் புரட்சிகளின் சங்கமத்தில் நாம் இருக்கிறோம். மூளை மற்றும் மனித உணர்வுகள் பற்றிய உண்மைகளை உயிரியலாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். மனித உள்ளுணர்வு என்பது உண்மையில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளனவற்றின் அடிப்படையில் விசயங்களின் போக்கை உணர்ந்து கொள்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. மேலும் நம்முடைய தேர்ந்தெடுப்புக்கும் படைப்புகளுக்கும் பின்னால் எந்த மாயாஜாலமும் இல்லை. அவை பல கோடிக்கணக்கான நரம்பணுக்கள் பரஸ்பரம் தமக்கிடையே பரிமாறிக்கொள்கின்ற உயிர்வேதி சமிக்கைகளின் விளைவே என்பதை உயிரியலாளர்கள் நிரூபித்து உள்ளனர். இந்த உயிர் தொழில்நுட்ப புரட்சி, செயற்கை நுண்ணறிவு என்கிற தகவல் தொழில் நுட்ப புரட்சியோடு சங்கமிக்கும் போது நம்மை விட நம் உணர்வுகளை சிறப்பாக கணினி வெளிப்படுத்தும். கற்றல், ஆய்வு செய்தல், தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல், முக்கியமாக உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல் போன்ற திறமைகள் மனிதர்களிடம் மட்டுமே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு இவை அனைத்திலும் மனிதர்களை விஞ்ச தொடங்கியுள்ளது. 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பமும் உயிர் தொழில் நுட்பமும் மனித குலத்தின் மீது வீசியுள்ள சவால் என்பது நீராவி இன்ஜினும், இருப்புப்பாதையும், மின்சாரமும் முன்வைத்த சவாலை விட மிகப்பெரியது என்றும், சர்வதேச ஒத்துழைப்பால் எப்படி இந்த தொழில்நுட்ப சீர்குலைவிலிருந்து மனித குலத்தை காக்க முடியும் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேசியவாதம், மதம், கலாச்சாரம் என்பது மக்களை பிரித்து சர்வதேச ஒத்துழைப்பை எப்படி கடினமாக்குகிறது என்பதும் அரசியல் சவால் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சீர்குலைவு, அணு ஆயுத போர் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவிலிருந்தும் மனித குலத்தை காக்க சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். மனித குலம் பிழைத்திருக்க, சொந்த நாட்டிற்கு, மதத்திற்கு , கலாச்சாரத்திற்கு விசுவாசமாக இருப்பதோடு, கூடவே ஓர் உலகளாவிய சமூகத்திற்கு ஆற்றப்பட வேண்டிய கணிசமான கடமைகளையும் நாம் நிறைவேற்றியாக வேண்டும்.ஆனால் மக்களை ஒருங்கிணைப்பது என்று வரும்போது, உண்மையை விட பொய்யான கதைகளுக்கு ஓர் உள்ளார்ந்த அனுகூலம் இருக்கிறது, ஹோமோ சேப்பியன்ஸின் முன்னுரிமை பட்டியலில் உண்மை ஒருபோதும் முதலிடம் வகித்ததில்லை காரணம் கற்பனை கதைகளை உருவாக்கி அவற்றை பரப்புவதற்கான தனித்துவமான மனித திறன்தான் ஹோமோ சேப்பியன்ஸ் இந்த ஒட்டுமொத்த பூமியையும் வெற்றி கொள்ள உதவியுள்ளது. அதனால்தான் மதக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் மிக வசீகரமாக இருக்கின்றன. உண்மையை புரிந்து கொள்ளவும் நியாயத்தை கண்டுபிடிப்பதில் தோற்கவும் செய்கிற மனிதகுலத்தின் பண்பு அதன் இயல்பாக மாறியது எப்படி என ஆய்வு நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளது.PEPSI - கோலா பல கோடி டாலர்கள் செலவு செய்து இளமை, ஆரோக்கியம், விளையாட்டு ஆகியவற்றுடன் தனக்கு தொடர்பு இருப்பது போல மக்களை நம்ப வைத்துள்ளது. மாறாக, உடல் பருமன் , நீரிழிவு நோய் போன்றவற்றால் நாம் துன்புறுவதற்கான வாய்ப்புகளை மட்டுமே அது அதிகரிக்கிறது. இருப்பினும், எல்லோரும் ஒரே கட்டுக்கதைகளை நம்பும்வரை, நாம் எல்லோரும் ஒரே விதிகளுக்கு கீழ்ப்படுகிறோம். அதன் மூலம் ஆற்றல் மிக்க விதத்தில் ஒத்துழைக்கிறோம். உதாரணத்திற்கு, பெரிய சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க கால்பந்து விளையாட்டால் உதவ முடியும், அதே நேரத்தில் வன்முறையை தூண்டுவதுற்கும் பங்களிக்க முடியும். தேசியவாதமும், மதமும் இதே பணியையே செய்கிறது. மகாபாரதத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்கிற கட்டுக்கதையை நம்பும் மக்களில் பலர், ஐன்ஸ்டின் உருவாக்கிய நிறைஆற்றல் சமன்பாட்டிற்கு பின்தான் அணுஆற்றல் சாத்தியமாகியது என்கிற உண்மையை அறிந்தவர்கள் என்பதில் வியப்பில்லை என சர்வதேச ஒத்துழைப்பை பலவீனப்படுத்தும் காரணிகள் அறிவியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது .மனிதர்கள் மேற்கொள்கின்ற தீர்மானங்களில் பெரும்பாலானவை உணர்ச்சிகரமான எதிர்வினைகளே அன்றி அறிவுபூர்வமான ஆய்வின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. உண்மையை நம்பிக்கையிடமிருந்து வேறுபடுத்த குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதும், துன்புற்று கொண்டிருக்கிற அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளவும், அனைத்து உயிரினத்தின் ஞானத்தை அனுபவத்தை மெச்சவும், தெரியாதவை பற்றிய பயமின்றி சுதந்திரமாக சிந்திக்கவும் சொல்லித் தருகிற கல்வியின் அவசியத்தை பேசுகிறது மூன்றாம் பகுதி. இன்று இருக்கின்ற மதங்கள் மற்றும் நாடுகளில் ஒன்று கூட, மனிதர்கள் இவ்வுலகை காலனி படுத்திய போதும், தாவரங்களையும், விலங்குகளையும் பண்ணை படுத்திய போதும், முதல் நகரங்களை கட்டியெழுப்பிய போதும், எழுத்துக்களையும் பணத்தையும் கண்டுபிடித்த போதும் இருக்கவில்லை என்பதை விளக்கி, கொள்கையளவில் தன்னுடைய தவறுகளையும் குறைகளையும் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும் மதசார்பற்ற அறிவியல்தான் மக்களை கட்டுக்கதைகளில் இருந்து காப்பாற்றும். மார்க்ஸ் ஒரு மத சார்பற்ற மாமேதை என்று கூறுகிற அதேநேரத்தில் ஸ்டாலின் மத சார்பற்றவரா என்கிற ஆய்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராணுவ வீரர்களும், பொறியாளர்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களோ - கவிஞர்களும், ஓவியர்களும், நாடக ஆசிரியர்களும் குறைந்தபட்சம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். மக்கள் போரில் ஈடுபடுவதும், பெரிய தேவாலயங்களை கட்டுவதும், கடவுள் மீது உள்ள நம்பிக்கையில்தான் கடவுள் குறித்த கட்டுக்கதைகள் மூலம் மக்கள் வசியப்படுத்தப் பட்டுள்ளனர். அதன் உறுதிப்பாடு கடவுள் குறித்த கதைகளை படிப்பது, கடவுளின் புகைப்படம், கடவுள் குறித்த நாடகம் மற்றும் பண்டிகைகள் அதை ஒட்டிய சடங்குகள் பழக்க வழக்கம் மூலம் கெட்டிப்படுத்தப் பட்டுள்ளது. எனவே நல்லதோ கெட்டதோ கட்டுக்கதைகள்தான் மனிதகுலம் கண்டுபிடித்த மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி என்பதை விளக்கி உண்மை பேசும் அறிவியல் புனைக்கதைகளின் தேவையை விவரிக்கிறதுநான்காம் பகுதி .மதமோ, சித்தாந்தமோ, அல்லது உலக கண்ணோட்டமோ எதுவானாலும் அது செய்துள்ள மிகப்பெரிய தவறு எது என்பதற்கு ஒரு தீவிரமான பதிலை வழங்க முடியாவிட்டால் .அதை நம்ப தேவை இல்லை என்கிறது. ஏராளமான தகவல்கள் உள்ளன, தகவல்களை அர்த்தப்படுத்துவதற்கும், எது முக்கியம், எது முக்கியமற்றது என வேறுபாட்டை அளிப்பதற்கும், பல தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு பெரிய படத்தை உருவாக்கும் திறன்தான் தேவை.ஒரு சராசரி நிலப்பிரபு விவசாயியை விட அதிக திறமை படைத்தவராக இருக்கவில்லை. நியாயமற்ற பொருளாதார பாகுபாடும், சட்ட பாகுபாடும்தான் அவரின் உயர்ந்த நிலைக்கு காரணமாக இருந்தது. ஆனால் 2100ஆம் ஆண்டுக்குள் பணக்காரர்கள் உண்மையிலேயே குடிசைவாசிகள் விட அதிக திறமையும், அதிக படைப்பாற்றலும், அதிக அறிவும் படைத்தவராக ஆகக் கூடும். 21ஆம் நூற்றாண்டின் விலைமதிக்க முடியாத சொத்து தரவுகள்தான். யாரிடம் அதிகமான தரவுகள் இருக்க வாய்ப்புள்ளதோ அவர்கள் அதிமனிதர்களாகி இருப்பார்கள். மற்ற அனைவரும் உதவாக்கரைகளாக ஒருங்கிணைக்கப்படுவர். இதிலிருந்து வெகுமக்களை காப்பதற்கான சாத்தியங்களை பேசுகிறது இறுதி பகுதி. தனது மொழி பெயர்ப்பு பணி மூலம் தமிழ் சமூகத்திற்கு பெரும் பங்காற்றிவரும் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள் இந்த புத்தகத்தை மொழி பெயர்த்துள்ளார். கடினமான பகுதிகளை கூட உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் குறையாமல் எளிமையாக புரியும் வகையில் மொழி பெயர்த்துள்ளார். சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை விரும்புகிற, அதற்காக செயல்படுகிற அனைவரும் வாசிக்க, விவாதிக்க வேண்டிய மிக முக்கிமான நூல் இது .-Arulprakasajothi-
P**A
21 lessons for the 21st century
This book is super.This is help for youngsters.
V**C
என்ன தெரிய வேண்டும் உனக்கு
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் இந்த புத்தகத்தை நான் படிக்க ஆரம்பித்தபோது வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தது. நாம் சிந்திக்கும் ஒவ்வொரு சிந்தனையும் மற்றும் நாம் எதை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ எதை கற்பனை செய்து கொண்டு இருக்கிறோமோ அது நிஜமில்லை அது எதார்த்தம் இல்லை என்பதை புரிவதற்கு இந்த புத்தகம் உதவியது. மேலும் வருங்காலத்தில் நானம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அரசியல்வாதிகளிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் மதம் மற்றும் அறிவியல் விஷயங்கள் இருந்தும் நாம் எவ்வாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த புத்தகம் நமக்கு ஒரு புரிதலை தருகிறது
R**H
Every body should read this
Have to read this book,if really need to know the function of the world and human
R**L
Excellent
It's a extra ordinary book from Yuval Noah Harari thank you so much Amazon for a fast delivery
K**U
Every Personality Must read and study for help to mankind
Very Very nice
A**R
Waste
Not worth buying
K**S
Excellent
Excellent writing and excellent translation, nagalakshmi shanmugam books are always excellent
Trustpilot
2 weeks ago
3 weeks ago